வேங்கைவயல் விவகாரம் | மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை - அனுமதி வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியவரவில்லை. 

இந்த விவகாரத்தில் சாதியப்போக்கான அரசியல் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் ஆளும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 110 நாட்களை நெருங்கிய நிலையில், இன்றுவரை குற்றவாளியை கண்டறிய முடியாமல் சிபிசிஐடி திணறி வருகின்றது.

இதற்கிடையே, இந்த விவாகரத்தில் சந்தேகிக்கப்படும் 11 பேரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் இரு தினங்களுக்கு முன் பரிசோதனை நடைபெற்றது.

இதில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றி வரும் காவலர் முரளி ராஜா மற்றும் இறையூர் மற்றும் கீழ முக்காடு பகுதியை சேர்ந்த 3 பேர் மட்டுமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருகை தந்தனர்.

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த எட்டு பேர், நாங்கள் இந்த டிஎன்ஏ பரிசோதனையை செய்து கொள்ள மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த மலம் கலக்கப்பட்ட நீரால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை பரிசீலனை செய்த நீதிபதி சத்யா, மரபணு சோதனை செய்ய அனுமதி அளித்தது உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VengaiVayal Issue 10 more DNA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->