வேங்கைவயல் விவகாரம் : 512 நாட்கள் கடந்த நிலையில், குற்றபத்திரிகை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டு 10வது முறையாக சி.பி.சி.ஐ.சி மனு!! - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவாகரத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய 10 முறையாக காலஅவகாசம் கேட்டு சி.பி.சி.ஐ.சி புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் மனு.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26 தேதி குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தமிழக காவல்துறை வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டது.

நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியதால் வழக்கு சி.பி.சி.ஐ.சி க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.சி அன்றியில் இருந்து இன்றுவரை விசாரணை நடத்திவருகிறது. சமீபத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடத்தியது.

சம்பவம் நடந்து 512 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையில்,குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு 10 முறையாக புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது சி.பி.சி.ஐ.சி.

மனுவை அளித்து சி.பி.சி.ஐ.சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறுகையில், வேங்கைவயல் விவாகரத்த்தில் கால அவகாசம் கேட்பது இதுவே கடைசி முறையாக இருக்கும்.குற்றவாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்வோம் என்று கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vengaiyal issue After 512 days CBCIC petitions for the 10th time for time to file chargesheet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->