பரபரப்பு - கோயில் வேப்ப மரத்தில் பால் வடிந்த அதிசியம்: பரவசத்தில் மக்கள்!  - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே கோயில் வேப்ப மரத்தில் பால் வடிந்த சம்பவம் பரபரப்பையும், பக்தர்கள் மத்தியில் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அடுத்த பருத்திக்காட்டு பாளையத்தில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகையே வேப்பமரம் ஒன்றும் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்த இந்த விநாயகர் கோவிலுக்கு பருத்திக்காட்டு பாளையம் மக்கள் தரிசனம் செய்ய மேற்கொண்ட போது, அருகே இருந்த வேப்பமரத்திலிருந்து பால் வடிவதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்த செய்தி அந்த கிராம மக்கள் இடையே பரவியது. இதனை அடுத்து மொத்த கிராம மக்களும் வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை கண்டு பரவசம் அடைந்தனர். 

மேலும் இது கடவுளின் செயல் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதற்கிடையே விநாயகர் கோவில் வேப்பமரத்தில் பால் வடிவது குறித்து அருகே உள்ள கிராம மக்களுக்கும் செய்தி பரவியதால், கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த வேப்ப மரத்தை பார்ப்பதற்காக வந்து சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதிகள் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

அறிவியல் ரீதியான காரணம் : வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதுதான் உண்மை காரணம் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veppa marathil paal vadivathu yean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->