தமிழகமே "மே 20 வரை மிக கனமழை" பெய்யும்- மஞ்சள் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் 26 மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மே 20 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாக வரும் மே 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை எட்டு முப்பது மணி நிலவரப்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த கனமழையானது இன்றும் நாளையும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Very heavy rain alert to Tamilnadu until may20


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->