கள்ளச் சந்தையில் மது விற்ற விவகாரம்.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக இரவு மற்றும் காலை நேரங்களில் தொடர்ந்து மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்டம் மாணவர் அணி செயலாளரும் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்க நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாணவர் அணி செயலாளர் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் என இரு பாதவிகளை வகித்து வந்த பாலகிருஷ்ணன் நமது இயக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய நடவடிக்கை இருந்ததால் அவர் இன்று முதல் அனைத்து பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் யாரேனும் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam admin who sold liquor in black market removed from post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->