இரவும் பகலும் பாராமல் மது விற்பனை..விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 4 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடை மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக காலை மற்றும் இரவு நேரங்களில் விற்பனை செய்து வந்ததாக நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட 4 பேரை திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் மற்றும் பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக பரமத்தி வேலூர் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருச்செங்கோடு மதுவிலக்கு ஆய்வாளர் பெரிய தம்பி மற்றும் பரமத்தி வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி தலைமையான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பரமத்தி வேலூர் நான்கு ரோடு, சந்தை பகுதி, பாலப்பட்டி அருகே உள்ள செங்கம்பள்ளி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன், கந்தநகரை சேர்ந்த மோகன், வீரபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, செங்கம்பள்ளியைச் சேர்ந்த பரத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேடம் கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam official arrested liquor sale in black market


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->