அரசியலை வென்ற மனிதம்.. விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியை காப்பாற்றிய விஜயபாஸ்கர்..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இச்சடி என்ற இடத்தில் நேற்று சரக்கு வாகனத்துடன் ஒரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அப்பொழுது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார். 

இந்த விபத்தை பார்த்த அவர் காரில் இருந்து இறங்கி சென்று பார்த்தபோது விபத்தில் சிக்கிய கார் திமுக நிர்வாகிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை அடுத்து விபத்தில் சிக்கிய நபரிடம் விசாரித்த போது அவர் திமுக புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தையும், திமுக நிர்வாகி கலியமூர்த்தியும் என தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்த திமுக நிர்வாகிகளுக்கும் சரக்கு வேனை ஓட்டி வந்த ஓட்டுனருக்கும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முதல் உதவி அளித்தார். பின்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இருவரையும் தனது காலையிலேயே ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அரசியலில் அதிமுக மற்றும் திமுக எதிரிகளாக இருந்தாலும் விபத்தில் சிக்கிய திமுகவினருக்கு உதவிய அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayabaskar saved DMK executive involved in an accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->