வந்ததே போதும்! மனிதம் போற்றும் அந்த திருப்புமுனை! #விஜயகாந்த் கடந்து வந்த பாதை! - Seithipunal
Seithipunal



பசிப்பிணி போக்கிய வள்ளல், தமிழ் திரையுலகின் நிஜ நாயகன், அரசியல் ஆளுமை, புரட்சி கலைஞன், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு உலகமே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறது.

80 - 90 களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்து புகழின் உச்சத்திலிருந்த நாராயணசாமி என்ற விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் மிக கொடுமையானது. மதுரை மாவட்டம், மாகாளிபட்டியில் இருந்து சினிமாவின் நாயகனுக்கும் கனவோடு சென்னைக்கு வந்தவுடன், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்டு வாய்ப்பை தேடி அலைந்தார்.

முதல் வாய்ப்பு நடிகர் ரஜினிகாந்திற்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படம் தான். விஜகாந்த் வாங்கிய முதல் சம்பளம் 101 ரூபாய். 

தொடர்ந்து இயக்குநர் எம்.ஏ.காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜகாந்த்திற்கு வில்லன் வேடம் கிடைத்தது. மேலும், விஜய்ராஜ் என்ற பெயரை விஜயகாந்தாக மாற்றினார்.

கதாநாயகனாக களமிறங்கிய ‘அகல் விளக்கு’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் தான் இன்று மக்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் மாமனிதாக உயர வைத்தது. 

‘அகல் விளக்கு’ படத்தின் படப்பிடிப்பில் அதிகாலையிலேயே மேக்கப் போட்டுவிட்டு ஹீரோயினுக்காக காத்திருந்தார் விஜயகாந்தை, காலை உணவு சாப்பிட விடாமல் படக்குழுவினர் தடுத்துள்ளனர். அதிகாலை முதல் மதியம் வரை பசியோடு விஜயகாந்தை காத்திருக்க வைத்துள்ளனர். 

அந்த காரணத்திற்காவே தனது கட்சி அலுவலகத்திலும், படப்பிடிப்பு தளத்திலும் யாரும் இனி பசியுடன் இருக்கக் கூடாது, தான் சாப்பிடுவம் அதே உணவை கடைநிலை தொழிலாளிக்கும் உணவளித்து வருவதாக பேட்டி ஒன்றில் கேப்டன் விஜயகாந்தே தெரிவித்திருந்தார்.

கேப்டன் விஜய்காந்த் நடித்த முதல் ஐந்து படங்கள் சரியாக போகவில்லை. அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் சூப்பர் ஹிட் ஆனது. விஜகாந்த்தை மக்கள் நெஞ்சில் வைத்து கொண்டாடினர்.

வாய்ப்பு கேட்டபோது தனது கருப்பு நிறத்தை வைத்து அவமானப்படுத்திய பல இயக்குநர்கள், விஜயகாந்த அலுவலகத்தில் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கிடந்தனர். 

உச்சத்திலிருந்த ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தது விஜயகாந்தின் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ போன்ற படங்கள்.

மேலும், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் தோல்வி அடைய, விஜயகாந்தின் 100வது படமான ’கேப்டன் பிரபாகரன்’ மெகா ஹிட்டடித்தது. 

1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்தவர் விஜயகாந்த். ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இதுவரை 153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் திரைத்துறையில் புதிய புரட்சியையும் செய்தார்.

குறிப்பாக 2002-ம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, தமிழ் திரையுலகை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார் விஜயகாந்த்.

திரைத்துறையை தாண்டி, ஏழை எளிய மக்களுக்கும், தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம் படைத்தவராக திகழ்ந்த விஜயகாந்த், 2000ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றதுக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். 

2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதுவே கேப்டனின் அரசியல் வருகைக்கு அஸ்திவாரமாக அமையந்தது.

மதுரையில் 2005ஆம் ஆண்டு மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி, தனது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்.

அடுத்த ஒரே ஆண்டில் 2006 சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது தேமுதிக, விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் அபார வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.

2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சி தலைவரானார். அடுத்தடுத்து நடந்த அரசியல் சதுரங்கத்தில் அவர் நம்பிய பலர் அவரின் முதுகில் குத்தினர்.

அடுத்து வந்த 2014, 2016 தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி, விஜயகாந்தின் மனதளவிலும், உடல்நிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கின. 

ஆளுங்கட்சியையும், எதிர்கட்சிகளையும் நோக்கி சிங்கம் போல கர்ஜித்த விஜயகாந்த் குரலில் ஏற்பட்ட மாற்றம் கண்டு தொண்டர்களும், ரசிகர்களும் கலங்கிப் போன ரசிகர்களுக்கு அவரின் மறைவு மீளா துயரத்தை கொடுத்துள்ளது.

ரமணா படத்தில் வரும் "எனக்காக வந்ததே போதும்" என்ற வசனமே அவருக்கான புகழாஞ்சலியாக இன்று ஒலித்துக்கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth life History


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->