நடிகர் சங்க கட்டடத்திற்கு "விஜயகாந்த்" பெயர்..!! நடிகர் விஷால் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும் தென்னிந்திய  நடிகர்கள் சங்க முன்னாள் தலைவருமான விஜயகாந்த் சில நாட்களுக்கு  முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் காலடியில் கும்பிட்டு விழந்த விஷால், "உடனடியாக வராததற்கு என்னை மன்னித்து விடுங்கள் சாமி" என கதறி அழுதார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால் "விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி, நல்ல மனிதர், தைரியமான அரசியல்வாதி. ஒருவர் மறைந்த பிறகுதான் சாமி என்று அழைப்பார்கள். ஆனால், கேப்டன் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள். வாழும் போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் கேப்டன்.

நடிகர், அரசியல், பொதுப்பணி என அனைத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும்.நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும்" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth name considered for Nidyar Sangham building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->