"நீ நடிக்கிறாய் உனக்கு சக்தி வேண்டும்" - விஜயகாந்த் கூறியதை நினைவு கூர்ந்து கதறிய சூர்யா!  - Seithipunal
Seithipunal


கோயம்பேட்டில் உள்ள மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார். .   

டிசம்பர்  28ம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள் தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

நேற்று வெளிநாடு சென்று வந்திருந்த கார்த்தி அவரது தந்தை சிவகுமாரருடன் அஞ்சலி செலுத்திய நிலையில்,  இன்று சூர்யா கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து  பேசிய அவர், அண்ணனின் இந்த பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்பகாலக்கட்டத்தில் விஜயகாந்த் உடன் பெரியண்ணா’படத்தில் நடித்த போது நீ நடிக்கியாய்  உனக்கு சக்தி வேண்டும் என்று கூறி, அவர் தட்டில் இருந்த உணவை உரிமையாக எனக்கு எடுத்து வைத்தார்.  பிரபலமான நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். 

ஆனால் கேப்டன் அனைவரையும்  அருகில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அவரை மறுபடியும் சந்திக்க முடியவில்லை எனபதை நினைக்கும் பொது  வருத்தமாக இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த்தை இல்லாதது மிகவும்  துருதிருஷ்டமானது ; அவரை போல் இனி யாரையும்  பார்க்க முடியாது. கேப்டன் உடன் பிறந்த  சகோதரரை போல் என்னிடம் பழகி வந்தார்.

அவரது மறைவு பேரிழப்பு. கடைசியாக அவரை  பார்க்க முடியாதது எனக்கு பெரிய இழப்புதான். அவரின் நினைவு எப்போதும்  எங்களுடன் இருக்கும்.  விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டடத்திற்கு  சூட்டுவதற்கு எனக்கு சம்மதம்.  மேலும், நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்ததில் அவரின் பங்கு மகத்தானது. அவரை யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நேரத்திலும் எளிதாக அணுக முடியும் என்று கூறினார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanthai remembers Suriya crying!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->