வீரப்பனுக்கு அரசியல்வாதியாக ஆசை..!! முன்னாள் டி.ஜி.பி விஜயகுமார் ஓபன் டாக்..!! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையில் டிஜிபி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சிறப்பு அதிரடிப்படைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்கும் பொறுப்பு விஜயகுமார் இடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி என்ற இடத்தில் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை தரணியில் உள்ள இதழியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜயகுமார் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "வீரப்பனுக்கு காடும் விலங்குகளும் அத்துபடி, புத்திசாலியும் கூட, அதனால் அவரை பிடிப்பது எங்களுக்கு சவாலாக இருந்தது. வீரப்பனுக்கு பூலான்தேவி போல அரசியல்வாதியாக ஆசை இருந்தது. பெரம்பலூர், திருச்சியைச் சேர்ந்த சில அமைப்புகள் அவருக்கு உதவி செய்து வந்தன.

மலைவாழ் மக்களும் வீரப்பனுக்கு பாதுகாப்பாகும் உதவியாகவும் இருந்து வந்தனர். மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிறைய உதவி செய்து வந்தார். அதனால் வீரப்பனை அவர்கள் கொண்டாடினர். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை வீரப்பன் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளி. வீரப்பனால் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

அதன் அடிப்படையில் தான் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை உயிருடன் பிடித்து சத்தத்தின் முன்பு நிறுத்த முயன்றோம். பலமுறை சரணடைய வாய்ப்பு தந்தோம் ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு. தற்காப்புக்காக சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் வீரப்பன் உயிரிழந்தார்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakumar said Veerappan wanted to become a politician


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->