கீழ்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!
vijayalakshmi seeman issue 792023
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி செய்தாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜய லட்சுமியிடம் 8 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சீமான் மீது அவதூறு பரப்பும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்த நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
English Summary
vijayalakshmi seeman issue 792023