நடிகை விஜயலட்சுமி மீது பரபரப்பு புகார்! அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்!
vijayalakshmi seeman issue NTK Complaint
திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி செய்தாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜய லட்சுமியிடம் 8 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் இந்த விசாரணையின்போது, ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி அளித்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சீமான் மீது அவதூறு பரப்பும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி மகளிரணி புகார் அளித்துள்ளனர்.
சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி அவதூறு பரப்பிவருவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
vijayalakshmi seeman issue NTK Complaint