#விக்கிரவாண்டி | தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக நிர்வாகி வீட்டில் புகுந்த பாமகவினர்! பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலர் ராமலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேஷ்டி, சட்டைகளை தூக்கி வீசி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். 

இவர் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக ஜூலை 10-ஆம் விக்கிரவாண்டி தொகுதிக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, விக்கிரவாண்டியில் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலர் ராமலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வேஷ்டி, சட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து‌ தகவல் அறிந்தவுடன் முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையிலான பாமகவினர்,  ஆசாரங்குப்பம் கிராமத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு திமுக கிளைச் செயலர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேஷ்டி, சட்டைகளை எடுத்து வந்து, தெருவில் வீசினர். இவ்வாறான செயல்களை கண்டிக்காமல் தேர்தல் அலுவலர்களும், தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினர். 

இதற்கிடையே இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election DMK Member vs PMK Member some incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->