பரபரப்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! கருத்துக்கணிப்பு வெளியிட தடை! - Seithipunal
Seithipunal


சென்னை : 8ம் தேதி மாலை முதல் 10ஆம் தேதி மாலை வரை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி சமீபத்தில் மரணமடைந்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

விக்கிரவாண்டி இடை தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்தது. விக்கிரவாண்டி இடை தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - பாமக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக- பாமக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

விக்கிரவாண்டி இடை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு பதிவு வருகின்ற 10ம் தேதி நடைபெறயுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

இந்தநிலையில்,ஜூலை 8ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து பத்தாம் தேதி மாலை 6:30 மணி வரை வாக்குப்பதிவுக்கு முந்தைய பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட தமிழக தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election Prohibited to publish polls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->