நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் குமுறல்! - Seithipunal
Seithipunal


நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை என்றும், நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கப்பட்டுள்ளார். 

வருகின்ற பத்தாம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் தங்களது இறுதி கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேரணியாக சென்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதேபோல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து தனது இறுதி கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்ட சீமான் தெரிவிக்கையில், 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.

 

நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு.

ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும்.

இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது என்று சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election seeman speech 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->