விக்ரவாண்டி திமுக வேட்பாளர் சொத்து பட்டியல்! பெரும் கோடிஸ்வரன் போலயே! அடேங்கப்பா இவ்வளவு சொத்து மதிப்பா?! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வருகின்ற ஜூலை மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்தலில் போட்டியிட 56 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 

இவர்களின் வேட்புமனுத் தாக்கல் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோரின் சொத்து மதிப்பு மற்றும் கடன் விவரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன் படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெயரில் ரூபாய் 1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944 மற்றும் அவரது மனைவி பெயரில் ரூபாய் 2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336 மற்றும் அவரது மகள் பெயரில் ரூபாய் 47 லட்சத்து 30 ஆயிரத்து 733 மற்றும் அவரது மகன் பெயரில் ரூபாய் 19 லட்சத்து 58 ஆயிரத்து 317 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் பெயரில் ரூபாய் 90 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூபாய் 33 லட்சத்து 6 ஆயிரத்து 370 மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு, அவர் பெயரில் ரூபாய் 1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19 மற்றும் அவரது மனைவி பெயரில் 55 லட்சத்து 41 ஆயிரத்து 409 ரூபாய் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை போன்று, பாமக வேட்பாளர் அன்புமணி பெயரில் ரூபாய் 11 லட்சத்து 61 ஆயிரத்து 187 மற்றும் அவரது மனைவி பெயரில் ரூபாய் 16 லட்சத்து 54 ஆயிரத்து 23 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும்தகவல் வெளியாகி உள்ளது. 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.க்ஷபாய் 4 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூபாய் 2 லட்சத்து 62 ஆயிரம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நகை கடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi DMK Candidate Property value


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->