கஞ்சா, மணல் கடத்திய திமுக நிர்வாகிக்காக கதறி அழுத திமுக எம்.பி?! விக்ரவாண்டியில் அன்று நடந்தது என்ன? அம்பலப்படுத்திய அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசூர் பகுதியின் திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணதாசனை, அதே பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த அண்ணாதுரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்டதாக கூறப்படும் கண்ணதாசனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக அமைச்சர் பொன்முடி, மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது திமுக எம்பி ஜெகத்ரட்சகன் கண்ணீர் மல்க, கதறி அழுது கொண்டே தெரிவிக்கையில், திமுக அலுவலகத்தில் இருந்த கண்ணதாசனை பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட அவரை மீண்டும் தாக்கியுள்ளனர். 

இது என்ன மாதிரியான செயல்? இதனை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பிரச்னை பெரிதாகும் என்று ஜெகத்ரட்சகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தாக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த திமுக நிர்வாகி குறித்தும் திடுக்கிடும் பல குற்றசாட்டுகளை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் கோயில் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து திமுகவினர் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அங்கு திமுகவினர் பெருமளவில் கூடி மது அருந்தி, சீட்டு விளையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான இத்தகைய கட்டமைப்புகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இத்தகைய கூடாரம் அமைப்பதற்காக ஆசூர் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் சட்டவிரோதமாக  மணல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்த அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கந்தன் என்பவரை கண்ணதாசன் கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளார். 

அதைத் தட்டிக்கேட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைத் தலைவர் அண்ணாதுரையும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர் என்றும், பல வழக்குகளில் அவர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இப்போது பா.ம.க. மற்றும் திமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை  கைது செய்வதற்கு பதிலாக மருத்துவமனையில் சேர்த்து திமுகவினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தேர்தல் அதிகாரியும் இதை வேடிக்கை பார்க்கிறார்" என்று அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவின் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் அதிகாரியும் அவர்களுக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என்றும், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi DMK vs PMK clash issue some info june 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->