தேர்தலை புறக்கணிக்கிறோம் - கிராம மக்களின் அறிவிப்பால் பரபரப்பு.!
village peoples announce avoide election in tirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. அதன் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக தான் நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் செல்ல வேண்டும். ஆனால், இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
]இந்த நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பேருந்து நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும், இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கிராமமே தேர்தலை புறக்கணிக்க உள்ளதா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
village peoples announce avoide election in tirupur