வடகிழக்கு பருவமழையால் 20 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும்! முகத்துவார அடைப்பை அகற்ற மக்கள் கோரிக்கை!
villages submerged in flood water due to northeast monsoon
சுனாமியால் ஏற்பட்ட மணல் குவியல்! ஆற்றில் கடல் நீர் புகுந்து நிலத்தடி நீர் மாசு!
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழியாக கடந்து கல்பாக்கம் அடுத்த வயலூர்-கடலூர் இடையே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த முக துவாரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஆழம் இருந்தது. இயற்கையான சூழலில் நன்னீர் கடலில் கலந்தும், கடல் நீர் ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசில்லாமல் இருந்தது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலையில் முகதாரப்பகுதி மணல் மேடால் அடைபட்டது. இதன் காரணமாக கடல் நீர் உட்புகுத்து நிலத்தடி நீர் மாசடைந்தது. இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தடுப்பணை அமைக்கப்பட்டது. இதன் பின்னர் கடல் நீர் ஆற்றலின் ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்பட்டு அணையில் தேங்கும் நீர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதரமாக மாறியுள்ளது.
தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முக துவார மணல் அடைப்பு காரணமாக ஆற்று நீர் கடலிலும் கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதியில் கருவேலமர புதர் சூழ்ந்து ஆற்றின் இயற்கை தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த புதுப்பட்டின அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி " 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. தற்போது சாதாரண விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன் பிடிக்க இயந்திர படகுகள் அவசியம். படகுகள் நிறுத்த துறைமுகங்கள் இல்லாத காரணத்தால் படகு வாங்காமல் மீனவர்கள் தவிக்கின்றனர். இதனால் தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்றின் முக துவாரத்தை ஆழப்படுத்தி சிறிய மீன் பிடித்துறை முகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி மீன்வள இயக்குனரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளது உள்ளேன்" என பேட்டியளித்தார்.
தற்பொழுது முட்டுக்காட்டு பகுதியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. சிறுதாவூர்,ஆமூர், மானாம்பதி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபநீர் ஓஎம்ஆர் சாலை வழியாக செல்லும் பகிங்ஹம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டு முகதுவரத்தில் கடலில் கலக்கிறது. இதேபோன்று பாலாற்றின் முகத்துவாரத்தையும் தூர்வாரி வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் இருந்து தங்களை காக்க வேண்டும் என 20 கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
English Summary
villages submerged in flood water due to northeast monsoon