பள்ளி சீருடையில் காணாமல் போன சிறுமி.. கிணற்றில் பிணமாக மிதந்த அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவி பள்ளி சீருடையுடன் கிணற்றில் சடலமாக மீட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் அப்போது சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இதனால் வீட்டில் சிறுமி தனியாக இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அச்சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகள் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போதும், பல்வேறு இடங்களில் தேடியபோதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதே கிராமத்தில் இருந்த கிணற்றில் பள்ளி சீருடையுடன் மகள் சடலமாக மிதந்ததை கண்டு பெற்றோர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்யக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram school girl body was found in well with school uniform


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->