விழுப்புரம்: சிறையில் கைதி மரணம்! அடித்தே கொன்னுட்டாங்க - கை குழந்தையுடன் கதறல், பெரும் பரபரப்பு!
Vilupuram Arputharaj Death
விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ல் போடப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து, பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அற்புதராஜை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மாலை 6 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் அற்புதராஜ்
சிறையில் சக கைதிகளுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த அற்புதராஜ், இன்று காலை 6 மணிக்கு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என தகவல்
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே அற்புதராஜ் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கை குழந்தையுடன் அற்புதராஜ் மனைவி கதறி அழுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நேற்று கைதாகிய நிலையில், இன்று அற்புதராஜ் உயிரிழந்ததால், போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Vilupuram Arputharaj Death