டாஸ்மாக் கடையை மூடுங்க! அதிரடி தீர்மானம்! தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி விட்டது! கீழ்சிவிரி கிராம சபையில் அன்புமணி இராமதாஸ்!
Vilupuram KeelVisiri Grama sabha Anbumani Ramadoss
இந்திய விடுதலை நாளையொட்டி, தனது சொந்த கிராமமான, விழுப்புரம் மாவட்டம் - கீழ்சிவிரியில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுள்ளார்.
இந்த கீழ்விசிறி கிராம சபையில் பிரம்ம தேசத்தில் செயல்படக்கூடிய டாஸ்மார்க் மதுக்கடையை மூட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி பேசினார்.
மேலும், தமிழ் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரியவர்கள் இளைஞர்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Vilupuram KeelVisiri Grama sabha Anbumani Ramadoss