விழுப்புரத்தில் பெரும் சோகம்: ஓடையை கடக்க முயன்ற 3 குழந்தைகள் பலி!
Vilupuram Konerikuppam Child Death
விழுப்புரம் மாவட்டம், கோனேரி குப்பம் கிராமத்தில் ஓடை நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோனேரி குப்பம் கிராமத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற குழந்தைகள், ஓடையை கடந்து செல்ல முயன்ற போது நீரில் மூழ்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சய் (10 வயது), சகோதரிகள் பிரியதர்ஷினி (10 வயது), சுபஸ்ரீ (8 வயது) ஆகிய மூன்று பேரும் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றிய ஒலக்கூர் காவல் நிலைய போலீசார், அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Vilupuram Konerikuppam Child Death