#சற்றுமுன் | விழுப்புரத்தில் 3 முக்கிய புள்ளியின் வீட்டில் அதிரடி ரெய்டு!
vilupuram raid
விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2015ல் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.