12 வயது சிறுமிக்கு கன்னித்தன்மை சோதனை! கடலூர் அரசு மருத்துவமனையில் விசாரணை! - Seithipunal
Seithipunal


12, 13 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை சோதனை சர்ச்சை தொடர்பாக கடலூரில் சுகாதாரத் துறை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

சிதம்பரம் தீக்ஷிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க தமிழக அரசு 'இரட்டை விரல் சோதனை' செய்து கொடுமைக்கு உட்படுத்தியதாக்க ஆளுநர் பேட்டி அளித்திருந்தார். மேலும், இது குறித்து ஆளுநர் எழுதிய கடிதத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் பொய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

"சிதம்பரம் நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள் விவகாரத்தில், நான்கு குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை. குழந்தை திருமணங்களுக்கு ஆதாரங்கள் இருந்ததால், எட்டு ஆண்கள், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில், இரண்டு பேரை பெண் மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். ஆனால் சிறுமிகள் யாரும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லைகுழந்தை திருமண குற்றச்சாட்டில் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது" என்று, டிஜிபி நேற்று விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் விஸ்வநாதன், கமலக்கண்ணன் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில்  தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை திருமண புகாரில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை மேற்கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virginity Test In Child Issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->