விருதுநகர் : தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து.. 24 பேர் படுகாயம்.!
Virudhunagar bus Accident in divider
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையில் இருந்து 42 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் பழங்கள் லோடு ஏற்றி வந்த சரக்கு வேன் பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதனால், வேன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 24 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Virudhunagar bus Accident in divider