பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: உடல் கருகி உயிரிழந்த தொழிலாளர்கள்!
Virudhunagar firecracker factory explosion
விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்து விட்டனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு அலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Virudhunagar firecracker factory explosion