திருமணமான 20 நாளில் நடந்த துயரம்! சோகத்தில் விருதுநகர்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே சாலை விபத்தில் புதிய மாப்பிள்ளை உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் நடந்த சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உள்ளிட்ட இருவர் பலியாகி உள்ளனர். 

ரவி (24 வயது), ரஞ்சித் (25 வயது) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சத்திரப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில், ரவி, ரஞ்சித் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான ரவிக்கு திருமணம் நடந்து 20 நாட்கள்தான் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாதது விபத்திற்கு காரணம் என்றும் போலீசார் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar road accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->