பிரதமர் மோடி தியானம் : கவனம் ஈர்த்த விவேகானந்தர் மண்டபம்!
Vivekanandar Memorial Rock Attracted Attention on PM Modis Meditation
சுவாமி விவேகானந்தர் கடலின் நடுவே உள்ள பாறையில் தியானம் செய்த இடம் தான் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபமாக உள்ளது. 1970ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்த இந்த நினைவு மண்டபம் ஒரு காலப்பெட்டகமாக நிலைத்திருக்கிறது.
கடலின் நடுவே அமைந்துள்ள இந்நினைவு மண்டபத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 6 கோடிக்கு மேலான மக்கள் இந்த சிறப்பு வாய்ந்த விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப்பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திரமோடி விவேகானந்தர் மண்டபத்தின் பின்புறமுள்ள தியான அரங்கில் நேற்று மாலை 6.28 மணி வாக்கில் அமர்ந்து தியானத்தை தொடங்கியுள்ளார். அப்போது அவருக்கு இளநீர் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் அங்கு தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர், இரண்டாவது நாளாக இன்றும் தனது தியானத்தை தொடரவுள்ளார். மேலும் காலை தியானத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக மண்டபத்தில் இருந்தபடியே சூரிய உதயத்தை பார்க்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, தனது வருகையால் மூடப்பட்ட கடைகளை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த தியானத்தால் விவேகானந்தர் மண்டபம் அனைவரிடத்திலும் கவனம் ஈர்த்துள்ளது.
English Summary
Vivekanandar Memorial Rock Attracted Attention on PM Modis Meditation