33 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ...அடுத்த மூன்று மணி நேரம் உஷார் மக்களே.!
Warning issued for 33 districts Watch out for the next three hours folks
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும். இதுதவிர அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
English Summary
Warning issued for 33 districts Watch out for the next three hours folks