பாட்டு சத்தத்தை குறைக்க காவலாளி! கட்டையால் அடித்துக்கொன்ற ஆட்டோ ஓட்டுநர்! - Seithipunal
Seithipunal


சென்னையில் ரேடியோ சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் தங்கும் விடுதியில் உள்ள காவலாளி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிபாடி நகர் பகுதியில் சேர்ந்தவர் தம்பிராஜ் இவர் சென்னை திருவல்லிக்கேணி தமுதீன் கான் தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து  காவலாளியாக ஆளாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று தங்கு விடுதியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெப்பகோட்டை பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் தங்கும் விடுதியில் தங்கி அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அய்யனார் இரவு நேரங்களில் வீடியோவில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டு உள்ளார். இதற்கு தம்பிராஜ் ரேடியோ சத்தத்தை குறைக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அய்யனாருக்கும் தம்பிராஜ்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்னர் அது கைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது காவலாளி தம்பிராஜை ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளார் படுகாயம் அடைந்த தம்பி ராஜ் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் அறிந்து அங்கு சென்ற போலீசார் விடுதியில் மேலாளர் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸ் சார் ஐயனாரை கொலை முயற்சி பதிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் தம்பிராஜ் சிகிச்சை பலனின்றி  இருந்து நேற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Watchman to reduce the sound of the song Auto driver hit with a stick


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->