வலுவிழந்துவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. மிதமான மழைக்கு வாய்ப்பு!
Weakening depression Chance of moderate rain
வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டிப் போட்டது.இந்தநிலையில் மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த புயல்சின்னம் வலுவிழந்து இன்று டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும் என்றும் இதனால் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Weakening depression Chance of moderate rain