களைகட்டியது தீபாவளி: லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் சொந்த ஊர் பயணம்!
Weeded Diwali Millions of people travel to their hometowns with excitement
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், சென்னையின் முக்கியமான பேருந்து நிலையங்களான கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன.
அதேபோல், சென்னையிலிருந்து கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரித்ததால், கூடுதலாக தாம்பரம், எழும்பூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மூன்று நாட்களில் மட்டுமே, ரயில்களில் சுமார் 5.50 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
விற்பனை மையங்களிலும் பண்டிகை முன்னிட்டு விற்பனை பெரிதும் நடந்து வந்தது. ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மழை வந்தாலும், மக்கள் உற்சாகத்துடன் தீபாவளிக்கான பொருட்களை வாங்க முனைந்தனர்.
கூடுதலாக 18 ஆயிரம் போலீஸாரும் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Weeded Diwali Millions of people travel to their hometowns with excitement