வார விடுமுறை எதிரொலி: கோவை - ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
Weekend Coimbatore Ooty special buses run
நீலகிரி, ஊட்டியில் தற்போது மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஊட்டிக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் ஊட்டிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதையொட்டி ஊட்டி செல்ல அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு 30 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வார இறுதி நாளான சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு கோயமுத்தூரில் இருந்து ஊட்டி செல்வதற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுடன் கூடுதலாக 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி கோவை - மேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டிக்கு 10 சிறப்பு பேருந்துகளும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
இது தவிர கோவையிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற இடங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Weekend Coimbatore Ooty special buses run