வார விடுமுறை எதிரொலி: 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம் திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகின்ற 10 ஆம் தேதி, 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு சென்னை கீழம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களுக்கு நாளை 425 பேருந்துகளும் நாளை மறுநாள் 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

திருப்பூர் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரிலிருந்து சென்னை, பெங்களூர் திரும்பும் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 10,985 பயணிகளும் சனிக்கிழமை 6,482 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 10237 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weekend special buses run


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->