கிசான் திட்டம் போன்று மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும்! மத்திய அமைச்சர் உறுதி! - Seithipunal
Seithipunal


எஸ்.எஸ் ராமசாமி படையாட்சியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவர் உடன் மாவட்ட ஆட்சியர் திரு பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டம் முடிந்த பின்பு மஞ்சங்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பாஜக மீனவர்கள் அணி சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் தேவனாம்பட்டினத்தில் உள்ள தமிழக பாஜக மீனவர் அணித்தலைவர் கவியரசன் இல்லத்தில் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "மத்திய பாஜக அரசு மீனவர் நலம் சார்ந்த திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாய திட்டமான கிசான் போன்று மீனவர்கள் காண நலத்திட்டங்கள் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலூரில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு சுத்திகரிக்காமல் நேரடியாக கடலில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்பரையினால் தமிழக மீனவர்கள் தாக்குபடுவதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Welfare schemes for fishermen like Kisan scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->