வில்லங்கமான வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.. சேலம் மாவட்ட எஸ்.பிக்கு பறந்த மெமோ! மேற்கு மண்டல டிஐஜி அதிரடி.!!
Western Zone DIG sent memo to Salem District SP
சேலம் மாவட்ட எஸ்.பியாக இருந்து வரும் சிவக்குமார் தனது வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் அந்த வகையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடத்திற்கான போட்டி பெரும் அளவு நிலவி வந்தது. ஏற்கனவே சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீ அபினவ் வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்த இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி நிலவியது.
அந்த வரிசையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையராக இருந்து வரும் லாவண்யா பெயரும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்கு அடிபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட எஸ்.பியாக சிவகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
அவர் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புகார்கள் சென்னையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமார் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் "பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை.. சேலம் மாநகரத்தில் திருமதி லாவண்யா என்பவர் காவல்துறை ஆணையராக இருக்கிறார்.
இவர் சேலம் மாவட்ட கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த பத்து மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வு பெற்ற டிஜிபி இடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்தார்" என பதிவிட்டிருந்தது காவல்துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமாருக்கு மேற்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மெமோ கொடுத்துள்ளார். அந்த மெமோவில் சேலம் மாநகர துணை ஆணையாளர் பெயரை குறிப்பிட்டு பதவி பிடிக்க வசூல் வேட்டை என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மெமோ வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட எஸ்பி கேமோ கொடுத்துள்ள விவகாரம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Western Zone DIG sent memo to Salem District SP