பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து சரக்கடித்த வீடியோ விவகாரம்; தமிழக அரசு செல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுவுக்கு எதிராக தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

இந்த வீடியோ பார்த்த சமூக ஊடகத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு , பெண்கள் ஒன்றாகி அமர்ந்து மது அருந்துவது குறித்து விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது, இந்த விவகாரம் தொடர்ப்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 04-ந் தேதியன்று தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோவில் உள்ள தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து பரப்பப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the Tamil Nadu government approach to the video of women sitting together and drinking alcohol in a bar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->