ரெயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸாப் குழு.. ! - Seithipunal
Seithipunal


ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசாரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும், அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிமுகப்படுத்தினார்.

பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும். தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவி, பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whatsapp group open for women safety in train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->