இரவு நேரத்தில் எந்தவிதமான ஆடைகளை அணியலாம்?
which dress wear in night
தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு நிம்மதியான உறக்கத்தை விரும்புகிறார்கள். அந்த வகையில் பெண்கள் இரவில் கூட உள்ளாடைகளை அணிந்து கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும் போது சில ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் அது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்
*இரவில் உள் ஆடையை அணிந்து கொண்டு தூங்குதல் கூடாது. அப்படி தூங்குவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக சருமம் சரியாக சுவாசிப்பதை தடுக்கிறது.
* உள்ளாடைகளை அணிந்து கொண்டு தூங்குவதால் பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
* இரவு நேரத்தில் ஆண்கள் பனியன் அணிந்து கொண்டும், பெண்கள் ப்ரா அணிந்து கொண்டும் தூங்கினால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
* அதிலும் பெண்கள் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்குவது தோளில் தொடர்ந்து தேய்க்க காரணமாகிறது. இது உங்களுக்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சினையை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் நல்ல தூக்கம் கிடைப்பதில் சிரமம் உண்டாகும்.
* அது மட்டுமல்லாமல் இறுக்கமான ப்ரா அணிவது மீள்தன்மை கொண்ட பைஜாமாக்கள் வலியை ஏற்படுத்தும். எலாஸ்டிக் உள்ள ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
* இறுக்கமான உள்ளடைகளை அணிவதன் மூலம் அசவுகரியமாக உணரலாம் மற்றும் இரவு முழுவதும் சரியாக தூங்க முடியாமல் போகலாம்.
English Summary
which dress wear in night