ஜாதி வேறுபாடுகள் இல்லாத இஸ்லாத்திற்கு இடஒதுக்கீடு எதற்கு? - நாராயண் திரிபாதி கேள்வி!
Why reservation for casteless Islam Narayan Tripathi Question
மேற்கு வங்காளத்தை ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கடந்த 2010ம் ஆண்டு இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. தற்போது, இந்த மாற்றம் சட்ட விரோதமானது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி கருத்து கூறியுள்ளார். அதில் அவர், " ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று தரவுகளின் அடிப்படையிலோ அல்லது விஞ்ஞானப் பூர்வமாகவோ, அல்லது ஆய்வின் அடிப்படையிலோ தான் அறிவிக்க வேண்டும்.
ஆனால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், அரசு வேலைகளில் முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்திற்காக, பல சமூகங்களை கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று தன்னிச்சையாக அறிவித்தது சட்ட விரோதமானது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்து மதத்தில் உள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வுகளால் தான் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மதங்களில் ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்றால் அங்கு எதற்காக இட ஒதுக்கீடு? ஓட்டுக்காக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பறித்து சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் அரசு என்பது உயர்நீதிமன்ற தீர்ப்பால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது" என்று நாராயண் திருப்பதி கூறியுள்ளார்.
English Summary
Why reservation for casteless Islam Narayan Tripathi Question