கணவனின் கண் முன்னே காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


சென்னை தரமணி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரகு (வயது26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஹேமலதா கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் கல்லூரி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ஹேமலதா சென்னை பெரம்பூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வரும்போது பின்னால் வந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் பின்னால் உட்கார்ந்து இருந்த ஹேமலதா கீழே விழுந்தார். இதில் ஹேமலதா தலை மீது லாரி டயர் ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் கணவனின் கண் முன்னே ஹேமலதா துடித்துடித்து உயிரிழந்தார். ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஹேமலதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிமெண்ட் கலவை லாரி ஓட்டுநர் ஆசாத் என்பவரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife death in accident infront of husband in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->