திருப்பத்தூர் || பாம்பு கடியை அலட்சியபடுத்தியதால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


மலைவாழ் மாணவர் விடுதியில் இரவு காவல் பணியில் இருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 6 முதல் 10ம் வகுப்பு பயிலும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அந்த விடுதியில் ஐந்து பேர் அரசு சார்பில் பணியாற்றி வருகின்றனர்.

அந்த விடுதியில் ருக்மணி என்பவர் பெண் காவலராக இருந்து வந்தார்.  அவரை எதிர்பாராதவிதமாக கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. அதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் மருத்துவமனை செல்லாமல் இருந்துள்ளார்.  இந்நிலையில், பாம்பின் விஷம் கடுமையாக பரவியதால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுதியிலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death in Thiruppaththur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->