சோகம் - லேப்டாப் சார்ஜர் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சக்தி குமார்-சிவகாமி தம்பதியினர். இவர்களுடைய மகள் செந்திமயில். பி.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், செந்திமயில் நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் செந்திமயிலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்திமயில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் சரணிதா என்பவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died electric shock attack in viruthunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->