பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு.. கணவன் கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..! - Seithipunal
Seithipunal


திருமணமான பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி மதுரை மாவட்டம், பொட்டாம்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சடலம் திண்டுக்கல் மாவட்டம், பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்ஜூனனின் மனைவி ராசாத்தி (19) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அர்ஜூனன்  சென்னையில் இடியாப்ப கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில், ராசாத்திக்கு வேறொருவருடன் திருமணத்தை மீறி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அர்ஜூனன் பெற்றொருடன் இணைந்து ராசாத்தியை எரித்து கொலை செய்தது தெரியவந்தது.  இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Killed in Chennai Due to Illegal affair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->