திருச்சி || குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருச்சி || குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர்கள் சரவணன் - தங்கமணி. இந்த தம்பதியினருக்கு சரோனிகா, பிரித்விகா என்று 2 மகள்களும், லட்ஜித் என்ற மகனும் இருந்தனர்.

பொக்லைன் ஓட்டுனரான சரவணன் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வந்ததனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கமணியை அவரது மாமனார்-மாமியார் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பிரித்விகா, லட்ஜித் உள்ளிட்டோருடன் காணாமல் போயுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர்கள் தங்கமணி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில் நேற்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அங்கு தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தீவிரமாகத் தேடி வந்த போது தங்கமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide with childrens in trichy manaparai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->