தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்! உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் பகுதியில் தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்மணி. எண்டோஸ்கோப் மூலம் சிகிச்சை அளித்து உயிரை காப்பற்றிய மருத்துவர்கள்.

விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை  சேர்ந்தவர் சுப்புலட்சுமி (57). இவருக்கு வயது மூப்பு காரணமாக பற்களை இழந்ததால், பல் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி  பல்செட் பொருத்தப்பட்டுள்ளது. சுப்புலட்சுமிக்கு தினந்தோறும் மூச்சு திணறல் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புலட்சுமியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில், கம்பியுடன் கூடிய பல்செட் உணவு குழாயில் சிக்கி இருந்தது தெரிய வந்துள்ளது. தூக்கத்தில் பல் செட்டை விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவர்கள், சுப்புலட்சுமிக்கு எண்டோஸ்கோப் மூலம் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman swallowed a Tooth model in her sleep Doctors who saved lives


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->