அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு! பெண்கள் நினைத்தால் கொள்ளையர்களை விரட்டலாம் - மருத்துவர் ராமதாஸ்!
Women can drive away robbers if they think Doctor Ramadoss
விக்கிரவாண்டி : நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள் என பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 45 ஆண்டுகாலமாக இடஒதுக்கீடு கேட்டு போராடிக் கொண்டு வருகிறேன். 10 முறைக்கு மேல் சிறைச்சாலைக்கும் சென்று வந்துள்ளேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர். பெண்கள் விழிப்புணர்வாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும்.கொள்ளையர்களை விரட்டமுடியும்.
தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்கு சாராயத்துடன் தற்போது கஞ்சாவும் கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும். நான் ஒரு நாளும் வன்னியர்களுக்காக மட்டும் இட ஒதுக்கீடு கேட்டு போராடவில்லை. அனைத்து சமுதாயத்தினருக்கும் இடஒதிக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.
பிள்ளைகள், பேரன், பேத்திகள் படித்து கலெக்டராக, டாக்டராக வரவேண்டும் என்று நானும் அன்புமணியும் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகின்றார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
English Summary
Women can drive away robbers if they think Doctor Ramadoss