திருமணமாகி மூன்றே மாதம், கொடூரமான முறையில் இளம்பெண் தற்கொலை!
women get sucide near gopi
கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடசாமி இவருடைய மகள் இந்துமதி. இவருக்கும் கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு சாரதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததால் இந்துமதி பாட்டியை பார்த்து உடல்நலம் விசாரிப்பதற்காக பொலவகாளி பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.
தந்தை வீட்டிற்கு வந்த இந்துமதி அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்குவதற்காக உள்ளே சென்றார். மாலை 7 மணி வரை கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இந்துமதி முகத்தில் பாலிதீன் கவரைபோட்டு முகத்தில் கட்டிக் கொண்டும், பலூனில் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் கேஸ் டியூப் வழியாக வாயில் வைத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்துமதி ஆன்லைனில் ஹீலியம் வாயுவை வாங்கியுள்ளார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்து இந்து மதியின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் ஆனதால், கோபி ஆர்.டி.ஓ.திவ்யபிரியதர்ஷினி இது பற்றி விசாரணை செய்தார். இந்துமதியின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பின்பே தற்கொலைக்கு காரணம் குறித்துதகவல்கள் வெளிவரும். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
women get sucide near gopi